நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் இன்று (11) சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
நோன்பின் மாண்புகள், சமூக நல்லிணக்கம், சகோரத்துவம், இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் தொடர்பில் மௌலவி ஏ. அஸ்ரப் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்திப், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.வி.அனீஸ், ஓய்வுபெற்ற பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் முன்னிலைப்படுத்தி வருடாந்தம் இடம்பெறும் இந்நிகழ்வில் மேலும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி), சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் நிர்வாகிகள், மதரஸா மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.