நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் நோன்பின் இப்தார் நிகழ்வு நேற்றுமுன் தினம் (4) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபாவின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகள், இஸ்லாத்தின் பார்வையில் நல்லிணக்கம், சகோதரத்துவம் தொடர்பிலான இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவினை சம்மாந்துறை ஜம்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.வை. அஹமத் ஜலீல் (ஹாமி) மேற்கொண்டார். ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக இடம்பெறும் இந்த இப்தார் நிகழ்வு நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஓரிரு வருடங்கள் குறுகியளவில் இடம்பெற்றிருந்த போதிலும் இவ்வருடம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விப்தார் நிகழ்வில் சம்மாந்துறை ஜம்யதுல் உலமா சபை உலமாக்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், 24 வது படையணியின் கட்டளைத் தளபதி விபுல ரட்ணசிறி, சம்மாந்துறை பிரதேச செயல உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொலிஸார், பாதுகாப்பு படை வீரர்கள், ஊர் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.