Ads Area

சம்மாந்துறையில் அளவை நிறுவையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. STR

 பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க

அளவீட்டு அலகுகள் மற்றும் நியமனங்கள் சேவைப் பிரிவின்

உதவி அத்தியட்ச்சகர் வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று சம்மாந்துறையில் அளவீடு தொடர்பான கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


இதன் போதும் சம்மாந்துறை விளினையாடி சந்தையில் அமைந்திருக்கக் கூடிய அங்காடி மற்றும் மீன் வியாபார வர்த்தகர்கள் பயன்படுத்தப்படும் தராசு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது இந்த தராசு சரியான அளவீடு காட்டாத பட்சத்தில் இதில் மோசடி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு உடனடியாக அங்கு காணப்பட்ட தராசுகளுக்கு சீல் வைக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


(100g தொடக்கம் 200g அளவீட்டில் மோசடி இருப்பதாக கருதப்படுகிறது) அளவை நிறுவையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொதுமக்கள் நிச்சயம் விழித்தெல வேண்டும் இவ்வாறு நடக்கும்  வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.


 பொருளாதார மாற்றத்தில் பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் இருக்கக்கூடிய நிலையில் இவ்வாறு அளவை நிறுவையில் மோசடி செய்யும் வியாபாரிகளை எவ்வாறு பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்.....


பொது மக்களின் கவனத்திற்கு

(இதற்கான தீர்வினை நீண்ட காலத்திற்கு முன்பே சம்மாந்துறை பிரதேச சபை மேற்கொண்டிருந்தது கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சம்மாந்துறை பொது சந்தை கட்டிட தொகுதியில் நிலையான நவீன தராசு வைக்கப்பட்டுள்ளது அதில் பொதுமக்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுடைய அளவை சரியானதா என்பதை அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற கருவின் மூலமாக அளவை நிறுவையை உறுதிப்படுத்தி கொள்ளலாம் ) ....

செய்தி:- Kutty story  தமிழ் 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe