பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தலில் பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், செவெனோக்ஸ் மாவட்ட சபைக்குத் தெரிவான முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதன்போது அவருடன் போட்டியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான லாரா மாக்ஸ்டன், மார்க் லிண்டோக் ஆகியோரும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கைப் பெண்ணான தினுஷா மணம்பேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷானி என்ற பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.