Ads Area

கூரை மீது ஏறி அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் போராட்டம் !

 அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க நேற்று (10) காலை முதல் சுரங்க மற்றும் புவிசரிதவியல் பணியகத்தின் அம்பாறை அலுவலக கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறித்த அலுவலகத்தின் தற்போதைய பிரதானியை நீக்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மணல் அகழ்வு உரிமம் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக  வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை இவர்  எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு ஆதரவாக  சுமார் 50 மணல் உரிமதாரர்கள் அடங்கிய குழு ஒன்றும் இவ் அலுவலகத்தின் முன் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe