Ads Area

வடக்கு - கிழக்கு இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் : ஜனாதிபதிக்கு மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கோரிக்கை

 மாளிகைக்காடு நிருபர்


வடக்கு - கிழக்கு இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மேசைக்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிழக்கை தளமாக கொண்ட சிவில் அமைப்பான அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அமைப்பு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அவர்கள் ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ள கோரிக்கையில் மிக நீண்டகாலமாக தொடரும் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்காக ஜனாதிபதி எடுத்திருக்கும் முயற்சி இலங்கையர்கள் எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியது என்றும் அழகிய இலங்கை தீவை முன்னேற விடாமல் தடுக்கும் காரணங்களில் இனப்பிரச்சினை முக்கியத்துவம் பெறுகிறது. அதை தீர்த்து நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி எடுக்கும் முயற்சிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 11,12,13 ம் திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாண இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணும் நோக்கில் ஜனாதிபதியின் முயற்சியாக வடக்கு- கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளதாகவும் அது காலத்தின் தேவையாகவும் அமைந்துள்ளதாகவும் அந்த பேச்சுவார்த்தைக்கு வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் ஒரு தேசிய இனமான முஸ்லிங்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும், பிரச்சினைகளையும் கேட்பது நீடித்த, உறுதியான தீர்வுக்கு வழி சமைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் இலங்கையின் அதிசிரேஷ்ட அரசியல் தலைவரான ஜனாதிபதிக்கு வடக்கு- கிழக்கில் வாழும் முஸ்லிங்களும் இனவாத, மதவாத, பிரதேசவாத செயற்பாடுகளினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை நன்றாக தெரிந்திருக்கும் என்றும் இவற்றை மையமாக கொண்டு நடைபெறும் பேச்சுவார்த்தையில் வடக்கு- கிழக்கில் உள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களையும் இம்மாதம் 11,12,13 ம் திகதிகளில் நடைபெற உள்ள வடக்கு கிழக்கு மாகாண இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன் அக்கடிதத்தின் பிரதிகளை பிரதமர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றோருக்கும் மேலதிக நடவடிக்கைக்காக பிரதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe