டெங்கு பரிசோதனை மற்றும் முழு இரத்த பரிசோதனைகள் ஆகிய இரண்டிற்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் நடத்துநர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிட்ட சோதனைகளுக்கு வர்த்தமானி விலைக்கு மேல் வசூலித்ததாக கண்டறியப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகேகொட, கல்கிசை, மாளிகாகந்த மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதிக கட்டணத்தை வசூலித்தவர்களுக்கு 9.4 மில்லியன்.ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது.
பொதுவாக பயன்படுத்தப்படும் அனைத்து ஆய்வக சோதனைகளுக்கும் தரப்படுத்தப்பட்ட விலைகளை அறிவிக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.