Ads Area

மட்டக்களப்பு மாவட்ட மூவின பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

 நூருல் ஹுதா உமர்


மட்டக்களப்பு மாவட்ட மூவின பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள்  அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் குடைகள் என்பன இன்று பாடசாலையின் அதிபர்கள்கள் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலைகளில் அதி கஷ்ட, தொழில் வாய்ப்பற்ற வாழும்  மட்/மம/ ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், கடுவத்மடு தர்மபால யூனியர் பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கும், மட்/ககு/ புணானை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள், மற்றும் குடைகளும் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.விக்ரமன், எம்.எஸ்.எம். ரிஸ்மின், ஐ.பி.எஸ். என். குணசேகர மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் எல். கஜரூபன் உட்பட பல அதிகாரிகளும், பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe