தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரத்தை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரை ஹெக்டேயருக்கும் குறைவான நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் இதுவரை ஏழு மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேரில் செய்கை செய்யும் விவசாயிகளுக்கு 20,000, ரூபா மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹெக்டேரில் பயிரிடுபவர்களுக்கு 40,000 ரூபாவையும் அரசாங்கம் வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.