கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதியில் தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.கல்கிஸ்ஸ காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த விபசார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடுதியை நடத்திச்சென்ற பெண் ஒருவர் உள்ளிட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24, 25, 30, 31, 36, 52 வயதுடைய அநுராதபுரம் மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.