Ads Area

ரஷ்ய சரக்கு ரயில் செல்லும் தண்டவாளத்தில் குண்டு வைத்து தகர்ப்பு. bombed

 உக்ரைன் எல்லை அருகே உள்ள ரஷ்ய சரக்கு ரயில் செல்லும் தண்டவாளத்தில் கடந்த மே 3 ஆம் திகதியன்று வெடிகுண்டு வெடித்ததில் ரயில் தடம் புரண்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் மொஸ்கோவால் இணைக்கப்பட்ட ரஷ்ய பிரதேசம் கிரிமியாவில் சமீபத்திய நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, குண்டு வெடித்ததில் இரண்டு ரஷ்ய சரக்கு ரயில்கள் தடம் புரண்டுள்ளன. இதனை தொடர்ந்து கிரிமியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஒரு ஆளில்லா விமானம் மோதியதால், செயின் பீட்டர்ஸ்பேர்க் அருகே மின்கம்பங்கள் சேதமடைந்ததோடு பெரும் புகை மண்டலம் உண்டானது.


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சியின் போது முக்கிய நிகழ்வாக மாறிய நாசிகளுக்கு எதிரான சோவியத் வெற்றியைக் குறிக்கும் வகையில் மே 9ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவித்து ரஷ்யா கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் புடின் இந்த ஆண்டிற்கான கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளார்.


ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் போகோமாஸ் "அடையாளம் தெரியாத வெடிகுண்டு சாதனத்தால்" ரயில் தடம் புரண்டதாகக் கூறியுள்ளார்.


உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகிலுள்ள சுமார் 370,000 மக்கள் வசிக்கும் நகரமான பிரையன்ஸ்க் பிராந்திய மையத்திற்கு வெளியே உள்ள ஸ்னேஜெட்ஸ்காயா நிலையத்தில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது வெடிகுண்டு வெடித்ததில் ரயில் தடம்புரண்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது. கடந்த மே 1ஆம் திகதி இதேபோன்ற குண்டு வெடிப்பில், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள உனசேவாவில் ஒரு ரயில் தடம் புரண்டு தீப்பிடித்தது. "நிச்சயமாக, இதுபோன்ற பல தாக்குதல்களுக்கு பின்னால் உக்ரைன் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர திட்டமிட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe