Ads Area

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை-fishermen

 தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நாளை (10) புயலாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இது வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.


இதன் காரணமாக கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும், அது மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe