Ads Area

இணைய பயனாளர்களின் தரவுகள் திருட்டு - இலங்கையும் சிக்கியது! Internet users

 இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


தெற்காசியா முழுவதும் மிகப்பெரிய சமூக ஊடக இணைய உளவு நடவடிக்கைகளை மெட்டா கண்டுபிடித்துள்ளது.


இதன்படி, மூன்று வெவ்வேறு அச்சுறுத்தல் மிகுந்தவர்களால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான நுட்பமாக செய்யப்பட்ட கற்பனையான கணக்குகளைக் கொண்டு தெற்காசியாவில் உள்ள தனிநபர்களை குறிவைத்து வெவ்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தீங்கிழைக்கும் இணைப்புகளை சொடுக்கவும், தீம்பொருளைப் (malware) பதிவிறக்கவும் அல்லது இணையம் முழுவதும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரச் செய்வதன் ஊடாகவம், பயனர்களை ஏமாற்ற, இந்த தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட ஊடுருவலாளர்கள் (APTகள்) சமூகப் பொறியியலை பெரிதும் நம்பியுள்ளதாக மெட்டாவின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி கய் ரோஷன் தெரிவித்துள்ளார்.


“சமூக பொறியியலின் அடிப்படையில் அச்சுறுத்தல் மிகுந்த ஊடுருவலாளர்கள் தீம்பொருளை பரப்புவதற்கு இணைய பக்கத்தில் முதலீடு செய்ய வேண்டியதில்லை”. என்றும் அவர் குறிப்பிட்டார்.


போலி கணக்குகள், காதல் தொடர்பைத் தேடும் பெண்கள் போன்ற பாரம்பரிய கவர்ச்சி முறைகளை பயன்படுத்துவதோடு, ஆட்சேர்ப்பு செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள் அல்லது இராணுவப் பணியாளர்கள் என மாறுவேடமிட்டு இந்த தீம்பொருள்களை (malwares) பரப்பி பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை களவாடுகின்றனர்


குறைந்த பட்சம் இரண்டு இணைய உளவு முயற்சிகள் குறைந்த பட்ச திறன்களைக் கொண்ட அதிநவீன தீம்பொருளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகவும், Apple மற்றும் Google ஆல் நிறுவப்பட்ட முந்தைய பயன்பாட்டு சரிபார்ப்பு சோதனைகளைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks-Hiru



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe