அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் கேரள செவிலியருக்கு 40 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பிக் டிக்கெட்டின் 252வது தொடர் டிராவில், அபுதாபியில் வசிக்கும் மலையாளியான செவிலியர் லௌசிமோல் அச்சம்மா முதல் பரிசான இரண்டு கோடி திர்ஹாம் (₹40 கோடிக்கு மேல்) வென்றார். கடந்த மே 6 ஆம் தேதி பிக் டிக்கெட் ஸ்டோரில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட டிக்கெட் மூலம் லௌசிமோலுக்கு இந்த லக் கிடைத்துள்ளது.
இந்த சீசனின் எட்டு பரிசுகளில், முதல் பரிசு உட்பட ஐந்து பரிசுகள் இந்தியர்களுக்கு கிடைத்துள்ளன.
இந்தியரான அலெக்ஸ் குருவிலா இரண்டாவது பரிசாக 1 லட்சம் திர்ஹம்களை வென்றார். மற்றொரு இந்தியரான நஜீப் அப்துல்லா மூன்றாம் பரிசான 70,000 திர்ஹம்களையும், கேரளாவை சேர்ந்த ஃபெரோஸ் ஐந்தாம் பரிசான 50,000 திர்ஹம்களையும், மற்றொரு இந்தியரான ரிதிஷ் மாலிக் ஏழாவது பரிசாக 20,000 திர்ஹங்களையும் வென்றார்.

