ஐ.எல்.எம் நாஸிம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை ரிஷாட் பதியுதீனுடன் சம்மாந்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் உடனான குழுவினர் கடந்த 07.06.2023ம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பு கட்சி காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.
கல்வி, கலை, கலாசாரம், தொழில் ஊக்குவிப்பு எனப் பலதரப்பட்ட விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டன.
தற்கால அரசியல் நிலைப்பாடு, முஸ்லிம் கட்சிகளின் கடமை, நாட்டின் பொருளாதாரம் எனப்பல துறைசார்ந்துஆழமான கருத்துக்கள் தலைமை ரிஷாட் பதியுதீன் அவர்களால் வழங்கப்பட்டன.
சம்மாந்துறை இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாய் அமைக்க என்னென்ன திட்டங்கள் இருக்கின்றதோஅதனை முன்மொழிவாக கட்சியின் அமைப்பாளரினூடாக வழங்குமாறும், அதற்கான முழு ஒத்துழைப்பையும் நானும், கட்சியும் வழங்குமெனவும் வாக்குறுதியளித்தார்.

