Ads Area

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் .

 மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி.வில்வரெட்ணம் சிவப்பிரியா அவர்களின் ஏற்பாட்டிலும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும் நேற்றைய தினம் இடம் பெற்றது.


குறித்த பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் விசேடமாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் காணி பற்றாக்குறை காணப்படுவதனால் LRC  காணிகளை காணியற்ற மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் அதற்கான பொறிமுறையினை வகுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் குருக்கள் மட பகுதியினை காத்தான்குடி பொலிஸாரும் பெரியகல்லாறு பகுதியினை கல்முனை பொலிஸாரும் நிர்வாகம் மேற்கொள்வதாகவும் பிரதேச அடிப்படையில் குருக்கள் மடம், பெரிய கல்லாறு பகுதிகளை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினரே நிர்வகிக்க வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.

அத்துடன் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்களில் குறித்த பாதையினை ஒருவழிப் பாதையாக்குவது தொடர்பிலும், கல்லாறு வாவியில் கூடுகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்பவர்களுக்கான அரச ஆவணங்களை முன்னுரிமைப்படுத்தி  வழங்குவதற்கான தீர்மானங்களும்  எட்டப்பட்டது. 

இதன்போது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த. தஜீவரன் மற்றும் திணைக்கள தலைவர்கள்,துறைசார் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe