Ads Area

“ஜனாதிபதி சுற்றாடல் விருது“ பெற்று பிராந்தியத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை.


சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றவைத்தியசாலைகளுக்கிடையிலான போட்டியில் பங்குபற்றி “ஜனாதிபதி சுற்றாடல் விருது“ பெற்று பிராந்தியத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை பாராட்டி பிராந்தியம் சார்பான விருதினையும் சான்றிதழையும் வழங்கி கௌரவப்படுத்தினார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது பொலித்தீன்  பாவனையை இல்லாமல் செய்தமை சுற்றுச்சூழலை அழகுற வைத்திருந்தமை மற்றும்  சுற்றுச்சூழல் பசுமை நடவடிக்கைகளை பராமரித்து வீண்விரயமாதலை குறைத்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காகவே இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது


 2023.07.10 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது விபத்துக்கள் மற்றும் காயங்களை சிறப்பாக பராமரித்தமைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட சான்றிதழ்களும் பணிப்பாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன


திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் மற்றும் தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனீபா மற்றும் திட்டமிடல் வைத்தியர் ஏ.ஆர். அகமட் நியாஸ் மற்றும் பணிமனை சார்பில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.ஏ வாஜித் மற்றும் பிரிவு தலைவர்கள் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்


இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.ஆர். அகமட் நியாஸ் அவர்கள் இவ்விருதினை பெற்றமைக்கான வைத்தியசாயைின் அனுபவங்கள் மற்றும் செயற்பாடுகளை விளக்கக் காட்சியுடன் தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது


 ஊடகப்பிரிவு




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe