சம்மாந்துறை அன்சார்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை யூ.எல்.எம். மொஹிடீன் பொது நூலகத்திற்கு ஒரு தொகை நுால்கள் கையளிப்புச் செய்யும் நிகழ்வு அண்மையில் யூ.எல்.எம். மொஹிடீன் நுாலகத்தில் இடம் பெற்றது.
இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கும் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியரான எம்.ரீ. அஸ்மிர் பிரதம பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட “மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை” எனும் நுால்களே யூ.எல்.எம். மொஹிடீன் நுாலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நுால்களை பிரதம பதிப்பாசிரியர் எம்.ரீ அஸ்மிர் அவர்களின் புதல்வர் முஹம்மட் ஹம்தி நுாலகப் பொறுப்பதிகாரியிடம் அண்மையில் கையளித்திருந்தார்.
“மன்சூர் எனும் நிர்வாக ஆளுமை” நுாலானது அண்மையில் கிழக்கு மாகாணம் சம்மாந்துறையைச் சேர்ந்த கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) தேசமாண்ய ஆதம்பாவா மன்சூர் அவர்களின் 39 வருட கால அரச சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழாவின் போது சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.