Ads Area

குடியிருப்பு பால்கனியில் துணிகளை உலர்த்த வேண்டாம்! - சவூதி வீட்டுவசதி அமைச்சகம் எச்சரிக்கை

ரியாத்: 


சாலையை நோக்கி இருக்கும் கட்டிடங்களின் பால்கனியில் துணிகளை உலர்த்த வேண்டாம் என சவூதி அரேபிய முனிசிபல்-கிராம விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது தவிர, கட்டிடத்தின் சுவர்களில் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள், விளம்பர ஸ்டிக்கர்கள் மற்றும் பலகைகளை நிறுவி அழகை கெடுக்க வேண்டாம் என்றும் நாட்டின் கட்டிட உரிமையாளர்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு சிதைத்தவர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதிக்குள் இதையெல்லாம் அகற்றி, கட்டிடங்களை அழகுபடுத்தவும், கட்டிடக் குறியீடு இணக்கச் சான்றிதழைப் பெறவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


சவுதி நகரங்களின் காட்சி அழகை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஆரோக்கியமான நகர்ப்புற சூழலை உருவாக்கவும் இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. சான்றிதழுக்கு அமைச்சகத்தின் 'பலாடி' இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டுமானம் முடிந்த பிறகு இந்த சான்றிதழைப் பெறலாம், ஆனால் பழைய கட்டிடங்கள் 19 வகையான  விதிமீறல்கள் அகற்றப்பட்டால் மட்டுமே அதைப் பெற முடியும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe