சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த எ.முஹம்மட் றிஸ்வான் சேர் அவர்கள் இன்று அதாவது 25/09/2023 திகதி தனது கடமையை பொறுப்பேற்று கொண்டார்.
புதிய அதிபர் சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.T.M.ஜனோபர், கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.L.A.மஜீட் அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.