சவுதி அரேபியாவில் பொது இடங்களில் மற்றவர்களின் அனுமதியின்றி மொபைல் போன் மூலம் படம் எடுப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் ஐந்து லட்சம் ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இதுகுறித்து சவுதி வழக்கறிஞர் ஃபைஸ் ஈத் அல்-அனாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட எந்த இடத்திலும் மற்றவர்களை படம்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதைப் பற்றி தெரியாமல் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஃபைஸ் ஈத் அல்-அனாசி கூறினார்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.