கிழக்கு மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எல்.முஹம்மட் முஸம்மில் அவர்கள் நியமனம் பெற்று இன்று அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் 1993ம் ஆண்டு குடியேற்ற உத்தியோகத்தராக நியமனம் பெற்றதோடு 2000 ஆம் ஆண்டில் காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டிலிருந்து அம்பாறை மாவட்ட தலைமை பீட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்துள்ளார்.
சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹும்களான கலந்தர் லெவ்வை மற்றும் ஆயிஷா தம்பதிகளின் புதல்வருமாவார். மேலும், இவர் குண்டசாலை விவசாயக் கல்லூரியின் டிப்ளோமாதாரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.