சம்மாந்துறை ஹிஜ்றா புரத்திற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடி நீர் வழங்கும் திட்டம் பிரதேச மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கமைய வீதிகளுக்கு குடிநீர் குழாயினை பொருத்துவதற்காக மக்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஆரம்பக் கூட்டம் ஹிஜ்றா புர பள்ளிவாசலில் திங்கட்கிழமை (2023.10.30) இடம்பெற்றது.
அம்பாரை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியிலாளர் எம்.ஐ.நஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட்,
சம்மாந்துறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்மாந்துறை நிலையப் பெறுப்பதிகாரி வை.எல்.எம்.பாஹிம், ஹிஜ்றா புர பள்ளிவாசல் தலைவர் றைஸ்தீன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.