Ads Area

தென்கிழக்கு பல்கலையில் மரநடுகை! ஊழியர் கௌரவிப்பு!! சான்றிதழ் வழங்கி வைப்பு!!! - Southeastern University

 


நூருல் ஹுதா உமர்


நூலக சேவையில் கடந்த 25 வருடங்களை பூர்த்தி செய்த ஊழியர்களின் கௌரவிப்பும் , ஸ்தாபகர் தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும். மர நடுகையும் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலிலும் நூலக கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது.

கடந்த 28 வருடங்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களின் குறித்த விசேட ஒன்று கூடல் சிரேஸ்ட பதவி நிலை உத்தியோகத்தர் சி. எம். ஏ. முனாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் விசேடமாக அம்சமாக மர நடுகை நிகழ்வும் அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் 1995 ஆம் ஆண்டு ஒரு உதவி நூலகராக நியமனம் பெற்று இன்று வரை அதன் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தன்னை முழுமையாக  அர்ப்பணித்த  தற்போதைய நூலகர் எம். எம். றிபாஉடீன் அவர்களுக்கு  அவருடன் அன்றிலிருந்து இணைந்து சேவை ஆற்றிய ஊழியர்களான சி. எம். ஏ.முனாஸ், எஸ்.எம்.எம்.. றமீஸ், ஏ.கே.அஷ்ரப்,  ஏ.எல்.எம்.. காசிம், எஸ். இன்பம் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்  பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக பல்கலைக்கழக பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம்.பாஸில், பேராசிரியர் எம்.ஏ.எல் அப்துல் ஹலிம், கலாநிதி எஸ்.சபீனா மற்றும் கலாநிதி எம்.எச்.ஏ.முனாஸ் ஆகியோரும் பதிவாளர் எம்.ஐ. நெளபர்,  நிதியாளர் மங்கலேஸ்வரன் மற்றும் வேலை பொறியியலாளர் எம்.எஸ்.எம். பசீல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

சிறப்பு அதிதிகளாக பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர்களான எம். சி. எம் .அஸ்வர் , கலாநிதி எம். எம். மஸ்ரூபா, ஏ.எம் நஹ்பீஸ் , எஸ். எல். எம். சஜிர் மற்றும் நெட்வொர்க் மேனேஜர் எம்.ஜே.எம். சாஜித் மற்றும் பல்கலைக்கழக நூலக உத்தியோகத்தர்கள், பராமரிப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், நில அழகுபடுத்தல் பிரிவு  உத்தியோகத்தர்கள் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக 27  ஆண்டு ஸ்தாபகர் தினம்  மற்றும் பொதுமக்கள் பார்வை தினம்  போன்றவற்றுக்காக கடுமையாக உழைத்த நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகத்திற்கு பல்வேறுபட்ட வேலைகளை செய்துகொடுத்த பராமரிப்பு பிரிவு , நில அழகுபடுத்தல் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவருக்கும்  உபவேந்தரால் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe