Ads Area

மத்ரஸா மாணவன் முஸ்அப் அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை மற்றும் புத்திஜீவிகள் ஜனாஸா நலன் நலன்புரி அமைப்பு, ஊர் நலன் விரும்பிகள் அனுதாபம் 


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


எம்.எஸ் முஸ்அப் அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை மற்றும் புத்திஜீவிகள் ஜனாஸா நலன் நலன்புரி அமைப்பு, ஊர் நலன் விரும்பிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


மர்ஹும் எம்.எஸ். முஸ்அப் 2023.12.05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்துல் சபீலிற் ரஷாத் என்னும்  குர்ஆன் மத்ரஸாவில் வபாத்தானார். அவரின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. 


இத் தருணத்தில் அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கின்ற அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் சாய்ந்தமருந்து - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை மற்றும் புத்திஜீவிகள் ஜனாஸா நலம்புரி அமைப்பு, ஊர் நலன் விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.


அவருடைய குற்றம் குறைகளை மன்னித்து, பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்.


யா அல்லாஹ் ! அவருக்காகச் செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe