( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பாடசாலை மதிப்பீட்டு குழுவினர் சம்மாந்துறை வலயத்தில் உள்ள அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நேற்று (7) வியாழக்கிழமை விஜயம் செய்திருந்தனர்.
கிழக்கு மாகாண மேலதிக மாகாணகல்வி பணிப்பாளர் எம். எம்.ஜவாத் தலைமையிலான குழுவினர் இந்த விஜயத்தின் பொழுது கலந்து கொண்டனர்.
அதேவேளை, சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையிலான கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை அங்கு கற்றல் கற்பித்தல் மதிப்பீடு ஏனைய பண்புத்தர சுட்டிகள் தொடர்பிலான மதிப்பீடுகளும் காலையில் நடைபெற்றன.
பின்னர் அதிபர் ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடல் மாலை 6 மணிவரை இடம்பெற்து.
அங்கு பாடசாலை தொடர்பிலான சாதக பாதக விடயங்களை அதிகாரிகள் சுட்டிக் காட்டியதுடன் பரிகார செயன்முறைகளையும் விதந்துரைத்தனர்.
அவற்றை நிவர்த்தி செய்வதற்காக பாடரீதியாக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.