கல்முனை குடி பிரதேசத்திற்கு உட்பட்ட வரிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இன்றைய தினம் நாபீர் பவுண்டேஷனின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் மாவட்ட இணைப்பாளர் பாசக் கவி பாயிஸ் கரீம் கலந்து சிறப்பித்ததோடு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இன்றைய நிகழ்வில் மகளிர் அமைப்பின் தலைவிகள் மற்றும் நாபீர் பவுண்டேஷன் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக மற்றுமொரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.