நாபீர் பவுண்டேஷன் செந்நெல் கிராமம் பிரிவு 02 க்கான மகளிர் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த பிரிவின் மகளிர் அமைப்பின் தலைவி K.L.சுபைதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக நாபீர் பௌண்டேஷனின் உள்ளூராட்சி வேட்பாளராக களமிறங்கிய S.A. அப்துல் றசூல் கலந்து சிறப்பித்ததோடு - நாபீர் பௌண்டேஷனின் சமூகம் சார்ந்த அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக தெளிவு படுத்தினார்.
இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் செயலாளர் I.L. அறபா மகளிர் அமைப்பின் ஊடாக கடந்த காலங்களில் நாபீர் பவுண்டேஷன் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்கால நகர்வுகள் தொடர்பாகவும்,தொடர்ச்சியான அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் தனித்து களமிறங்குவது தொடர்பான கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன் தேர்தல் சம்மந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.