சம்மாந்துறை மக்களுக்கான சேவைகளை வினைதிறனுடன் வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மக்களுக்கு விரைவாக பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நேரலையூடாக நடாத்தப்பட்ட 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் 'உருமய' நிபந்தனைகள் அற்ற காணி உரிமை பத்திரம் வழங்குவது தொடர்பான விழிப்பூட்டல் கூட்டத்தில் காணி ஆணையாளர் நாயகம் அவர்கள் குறிப்பிடுகையில்;
"அகில இலங்கை ரீதியில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் முதலாவதாக 'O' வரைபடம் அனுப்பி வைக்கப்பட்டதன் காரணமாக குறித்த தேசிய வேலைத் திட்டத்தின் முதலாவது உறுதி, சம்மாந்துறை பிரதேச பயனாளர் ஒருவருக்கே அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்."
தேசிய ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்களால் அறிமுகப்படுத்தப்படும் 'உருமய' வேலை திட்டத்தின் முதலாவது ஆவணம் சம்மாந்துறைக்கு கிடைப்பது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
இதனை சாதிப்பதற்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டிய சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா அவர்களுக்கும் உதவி பிரதேச செயலாளர் U.M. அஸ்லம் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் T. ஸவாஹிர், லாபிர் உட்பட காணிக்கிளையின் தலைமை முகாமைத்துவ உத்தியோகத்தர் நபீறா உட்பட சகல உத்தியோகத்தர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்பாறை மாவட்டத்தில் முதலாவது උරුමය" வேலைத் திட்டத்திற்கு தனியான பிரிவு சம்மாந்துறை பிரதேச செயலகத்திலேயே தாபிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
சம்மாந்துறை.