அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.
கட்சியை விட்டு பா.உ. முஷாரப் நீக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ந்து செயற்பட முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.