Ads Area

கல்முனை நகரப்பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த கரிநாள் போராட்டம்.

 பாறுக் ஷிஹான்.


இலங்கையின் 76வது சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கரிநாள் போராட்டம் முன்னெடுக்கபட்டது.


கல்முனை நகரப்பகுதியில் நடைபெற்ற குறித்த  போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்  உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. எனினும், வட, கிழக்கெங்கும் கரிநாளாக அனுஷ்டிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,


பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. எனினும், தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை இது ஒரு கரிநாள். எமக்கு சுதந்திரமோ அல்லது விடுதலை மற்றும் உரிமைகள் கிடைக்கப்பெறாமையை உறுதிப்படுத்துவதற்காக வட, கிழக்கில் தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் காணாமலாக்கப்பட்ட உறவுகளும் தமிழ் தேசிய முன்னணியினராகிய நாங்களும் அணி திரண்டு எதிர்ப்பினைப்பதிவு செய்யவிருக்கின்றோம்.


எனவே, சுதந்திர தின நாளை பகிஸ்கரித்து தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கு அந்நாளைப் பயன்படுத்துவோம் என்றார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe