(சர்ஜுன் லாபீர்)
உலக உணவுத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 1,262 குடும்பங்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் அண்மையில் (16) நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
உலக உணவுத்திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொருளாதார நெருக்கடி காலகட்டத்திலும் சுமார் 7,000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, தற்போது அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்படும் நிவாரண வேலைத்திட்டதில் மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களில் 04 பிரதேச செயலகங்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் சம்மாந்துறை பிரதேச செயலகமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல் பாரிஸ், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.எம்.தாஸீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.நவாஸ், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எஸ்.எம் அஸாருதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம் சசீர் ,எம்.டி அஸ்மீர், எம்.ஆர் பெளசான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.