Ads Area

மாவடிச்சேனை ஜூம்ஆப்பள்ளிவாயல் சமூக மட்ட அமைப்புக்களின் 76வது சுதந்திர தின நிகழ்வு.

 எஸ்.எம்.எம்.முர்ஷித்.


இலங்கைத்திரு நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவடிச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் மற்றும் மாவடிச்சேன சமூக நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விஷேட சுதந்திர நிகழ்வு நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாவடிச்சேனை பிரதான வீதியில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.


மாவடிச்சேனை முஹைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக செம்மண்ணோடை தக்வா ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.எம்.றாஷிக் கலந்து கொண்டதுடன், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய அதிபர் எம்.சி.ஐயூப்கான், மாவடிச்சேனை உப தபாலதிபர் மெளலவி எம்.எஸ்.எம்.அஷ்ரப், பள்ளிவாயல் நிருவாகிகளான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் எம்.ஜே.அல்பத்தாஹ், எம்.எம்.அமீர், றியல் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் முஹம்மது அஜ்மீர், பாசிக்குடா அக்கிவில்லா உரிமையாளர் காமினி, பள்ளிவாயல் நிருவாகிகள், அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வில், தேசியக்கொடியேற்றப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிடம் மௌனப் பிரார்த்தனை செலுத்தப்பட்டது.


பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களது கலாசார உடையிலான நடைபவணி மாவடிச்சேனை பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு பிராதான வீதி வழியாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்று வட்டத்தினூடாக சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற இடத்தை வந்தடைந்தது. 


அனைத்தினங்களையும் சேர்ந்த இருபது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏற்பாட்டர்களால் அவ்வீதியில் பயணித்தோருக்கு தாகசாந்தியும் வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வினை மாவடிச்சேனை முஹைதீன் ஜூம் ஆப் பள்ளிவாயலுடன் அல் அக்ஸா ஜூம்மா பள்ளிவாயல், றியல் விளையாட்டுக்கழகம், அல் இக்றா விளையாட்டுக் கழகம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் - கோறளைப்பற்று மத்தி, வர்த்தக சங்கம், சமூக தொழில் வழிகாட்டல் அமைப்பு, டோண் டச் விளையாட்டுக் கழகம், AWM ஜிப்ரி மனித சமூகம், கிராமப்புர வளர்ச்சி சங்கம் ஆகியன பிரதேச அமைப்புக்கள் இணைந்து மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாவடிச்சேனை முஹைதீன் ஜூம் ஆப்பள்ளிவாயல் செயலாளர் சட்டத்தரணி ஐ.முபீன் நன்றியுரை நிகழ்த்த, ஏற்பாட்டுக்குழு சார்பாக நிகழ்ச்சிகளை அஸ்கர் அலி சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தார். 


நிகழ்வுக்கான குளிர்பான வினியோக ஏற்பாடுகளை றியல் விளையாட்டுக்கழகத்தினர் சிறப்பாக மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான பேக்கரி உரிமையாளர் மன்சூர் அனுசரணை வழங்கியிருந்தார்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe