Ads Area

மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை கல்லரச்சல் - 03 பிரதேசத்திற்கான கிளைக் குழுத் தெரிவுக் கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை கல்லரச்சல் - 03 பிரதேசத்திற்கான கிளைக் குழுத் தெரிவுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் அண்மையில் (28)  இடம்பெற்றது.


இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை கல்லரச்சல் - 03 கிளைக் குழுத் தலைவராக எஸ்.ரீ.ஜௌபர், இளைஞர் அணித் தலைவராக எம்.அத்தீக் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், அதனுடன் 20 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


இதில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஜிப்ரி, டாக்டர் மஜீட்,  மெளலவி ஆசிரியர்  நயீம், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe