Ads Area

இந்திய தேசத்தில் கராத்தே போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்ட சம்மாந்துறை இர்ஷாட்..!

சம்மாந்துறையில் இருந்து சென்று இந்திய தேசத்தில் தனது திறமையால் 𝐖𝐊𝐌𝐀 𝐎𝐏𝐄𝐍 𝐊𝐀𝐑𝐀𝐓𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒𝐇𝐈𝐏 𝟐𝟎𝟐𝟒 இல் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் சம்மாந்துறை இளைஞர் இர்ஷாட்.


World Karate Masters Association ஏற்பாடு செய்த திறந்த கராத்தே போட்டியானது இந்தியாவின் ஆலந்தூர் நகரின் Montfort Matric உள்ளக அரங்கில் கடந்த 2024.02.18ம் திகதி நடைபெற்றது. 


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த கராத்தே வீரர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் International Martial Arts Association (IMA) இலங்கைக் கிளை சார்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த இர்ஸாட் கலந்துகொண்டு Senior Black Belt Kata நிகழ்சியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.


இப் போட்டிக்கான விசேட பயிற்சிகளை வழங்கி அவருடைய இந்த வெற்றிக்கு உரமூட்டியவர் அவரது கராத்தே போதனாசிரியரும் International Martial Arts Association (IMA) இலங்கைக் கிளையின் தலைமை ஆசிரியருமான Shihan Muhammeth Ikbal அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe