Ads Area

கிண்ணியாவில் விசேட தேவை உடையோர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசேட தேவை உடையோர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான 92  சக்கர நாற்காலிகள் இன்று (03) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.


சக்கர நாற்காலிக்கான அனுசரணையினை Muslim hand நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே. நிஷாவுஸ், முன்னாள் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம் நிவாஸ், கிண்ணியா பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். ஹஸ்மி, கிண்ணியா பிரதேச செயலகத்தின் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.எம்.பஹ்மி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


District Media Unit

Trincomlaee





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe