Ads Area

காரைதீவில் தூண்டில் மீனவனுக்கு அடித்த அதிஷ்டம் : கோடி பெறுமதியான நீல தூணா சிக்கியது.

 பாறுக் ஷிஹான்.


49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளூரில் நீல ஹெலவள்ளா (ஹென்டா) சிக்கியது.


காரைதீவு பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும்  நீல தூணா அல்லது உள்ளூரில் நீல ஹெலவள்ளா (ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன்  சிக்கியுள்ளது.


பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களைக் கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம், காரைதீவுப் பகுதியில் மீனவரின்தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.


கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீனினங்கள் 7 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும்  யாவும் பெறுமதிமிக்கதாகவுள்ளதாகவும் பாரிய மீன்களைக் கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe