Ads Area

மங்காப் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் கும்பத்தினருக்கு 15000 டாலர்கள் இழப்பீடு - குவைத் அரசு.

குவைத்தின் மங்காப் பகுதியில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் என்று மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆவார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக பதினைந்தாயிரம்  டாலர்கள்(சுமார் 5000 தினார்கள்) குவைத் அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் அரபு நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் இந்தத் தொகை விநியோகிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கு சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும். அதேபோல் உயிரிழந்த தொழிலாளர்கள் வேலை செய்த NTPC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஜி ஆபிரகாம் அவர்கள் கடந்த தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சமும், 4 ஆண்டு சம்பளத்துக்கு இணையான தொகையை காப்பீடு பணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.


இதை தவிர தமிழக அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டு, உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் அதற்கான காசோலை குடும்பத்திடமும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு சார்பில் 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது.கேரளா அரசும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தால 5 லட்சம் இழப்பீடாக அறிவித்தது குறிப்பிடதக்கது. இதை தவிர உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு தொழில் அதிபர் யூசுப் அலி 3 லட்சமும், ரவி பிள்ளை 2 லட்சமும் அறிவித்து உள்ளனர்.


மங்காப் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் அந்த நேரத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பது அந்த நேரத்தில் வெளியிடப்படவில்லை. இந்த பயங்கரமான தீ விபத்தில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் உட்பட 45 இந்தியர்களும், 3 பிலிப்பைன்ஸ் நாட்டினரும் உட்பட மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


செய்தி மூலம் - arabtamildaily




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe