சம்மாந்துறை அல் அர்சத் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற அர்சத்தியன் பிரிமீயர் லீக் சீசன்- 3 இறுதி நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்டம் மற்றும் சமூக அமைப்பின் தலைவர் ரிஸ்லி முஸ்தபா அவர்களும் கௌரவ அதிதியாக இக்ரா நிறுவனத்தின் உரிமையாளர் சத்தார் ஜலால் அவர்களும்,முன்னா ள் இலங்கை அணியின் கிரிக்கெட் அகடமியின் வேக பந்துவிச்சாளர் சிபாஸ் அஹமட் ஜிப்ரி அவர்களும்,ரிஸ்லி முஸ்தபா கல்வி திட்ட மற்றும் சமூக அமைப்பின் சம்மாந்துறை பிராந்திய பொறுப்பாளர் பாரிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வுக்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரனையினை றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் அமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.