அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளராக சட்டத்தரணி. அலரி ரிபாஸ் நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் மருதமுனைக்கான மத்திய குழு தலைவராக வை.கே. ரஹ்மானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கடந்த வெள்ளிக்கிழமை (12) கெளரவ. தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கிவைத்தார்.
இதன் போது, கட்சியின் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அமீர் அலி, கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி. அன்ஸில், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான அஷ்ரப் தாஹீர் , அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அப்துல் ரஸாக் (ஜவாட்) , கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஆசிரியர். காதர் , உயர்பீட உறுப்பினர் கலீல் முஸ்தபா உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.