உலகின் சிறந்த 100 அரிசி வகை உணவுகள் பட்டியலில் இலங்கை மக்களின் சோறு-கறி உணவு 6வது இடத்தினைப் பிடித்துள்ளது.
TasteAtlas வெளியிட்ட கட்டுரை, இலங்கையின் பிரதான உணவான கறி-சோறு உணவுக்கு 5 க்கு 4.6 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் உணவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தேசிய உணவுகளில் பெருமை சேர்க்கும் நோக்கத்துடன், TasteAtlas பார்வையாளர்களின் மதிப்பீட்டைப் பயன்படுத்தி தரவரிசையை உருவாக்கியுள்ளது.
செய்தி மூலம் - https://www.themorning.lk