லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஜூலை 2) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பின் பின் 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ. 3,690 உள்ளதாகவும்,
5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது ரூ.1482 ஆக உள்ளதாகவும்,
2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 18 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது ரூ.694 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk