பாறுக் ஷிஹான்
மீன் ஏற்றிச்செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்து மோதி விபத்து ல்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து இன்று (13) காலை அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது, கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்குக்ஷ் சொந்தமான பேரூந்தும் மட்டக்களப்பு-கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச்செல்லும் வண்டியும் சிக்கிக்கொண்டுள்ளதுடன், பேரூந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதன் போது, இவ்விரு வாகனத்தினையும் செலுத்திச் சென்ற சாரதிகள் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவ்விபத்து இடம்பெற்ற வேளை அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் வளைந்து செல்லும் பிரதான வீதியில் சிறிய ரக மீன் ஏற்றிச்செல்லும் வண்டி வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாகவும் நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.