Ads Area

வவுனியா ,நவகம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம் ,வவுனியா பிரதான வீதி நவகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் வேன் மோதியதில் இன்று (14) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா, இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.


அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் ஒன்று வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முச்சக்கர வண்டியுடன் வேன் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe