சவுதி அரேபியாவில், திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு குழந்தை பிறந்தால் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு அனுமதி இருக்கிறது. தொழிலாளிக்கு திருமணம் என்றாலோ அல்லது தொழிலாளியின் மனைவி, பெற்றோர் அல்லது குழந்தை இவர்களில் எவரேனும் இறந்தால், அதற்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கும் உரிமை உண்டு.
மேலும், சவூதி அரேபியாவிலிருந்து ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக இருக்கும் தொழிலாளர்களுக்கு, பெருநாள் விடுமுறையையும் உள்ளடக்கி 10 முதல் 15 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என திருத்தப்பட்ட சட்டம் தெளிவு படுத்துகிறது. ஆனால், அவர்கள் குறைந்தபட்சம் ஒரே முதலாளியிடம் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நிறுவனங்களின் தேவைக்கேற்ப இதற்கு ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது.