Ads Area

நபர் ஒருவரைக் கொ*லை செய்தமைக்காக எமன் நாட்டில் மர*ண தண்டனை பிடியில் சிக்கியுள்ள கேரளா தாதி (நர்ஸ்).

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதற்கான முயற்சி தடைபட்டு உள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, அதிக சம்பளத்தை வழக்கறிஞர் எதிர்பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.


கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுவுள் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை காப்பாற்ற தயார், பிரேமா குமாரி 5 மாதங்களாக ஏமனில் முகாமிட்டு உள்ளார்.


ஏமன் நாட்டு சட்டப்படி பிளட் மணி( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதடன், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


இதற்காக , தலால் அப்தோ மஹ்தி தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா அமீர் என்ற வழக்கறிஞர், இந்தியா அரசு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜூலை 4ம் தேதி அவருக்கு 19,871அமெரிக்க டாலர் பணம் வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது.


ஆனால், அவர், மேலும் 20 ஆயிரம் டாலர் பணம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் எனக்கூறியுள்ளார். இதனால், பேச்சுவார்த்தை நடப்பது தடைபட்டுள்ளது. 'கிரவுடு பண்டிங்' என்ற முறையில் வெளிநாடு வாழ் மலையாளிகளிடம் நிதி திரட்டித்தான், ஏற்கனவே பணம் வழங்கப்பட்டது. இப்போது மேலும் அதே அளவு பணத்தை எப்படி திரட்டுவது, யாரிடம் உதவி கோருவது என்று தெரியாமல், அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.


Kerala-nurse-facing-death-penalty-in-Yemen





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe