சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அவர்களை ஆதரித்து சம்மாந்துறையில் கடந்த (13) ம் திகதி கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு மேலால் ( LED Light ) பொருத்திய "புறா" பறந்து அது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து நேற்று (16) திகதி வயது (18,19) மதிக்கத்தக்க புறா வளர்ப்பில் ஈடுபடும் இரு இளைஞர்களை விசாரணை செய்த போது "சமூக ஊடகங்களில் காணொளியை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் காலில் (LED light) எனப்படும் ஒரு வகையான மின் விளக்கினை பறவையின் காலில் பொருத்தி இரவு வேளையில் அதனை தினமும் பறக்க விடுவது" என அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.