Ads Area

வாகன விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 14 வயது சிறுமி மரணம்!

 சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்.


அம்பாரை -  கல்முனை வீதியில் மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இன்று புதன்கிழமை (18) காலை 08.15 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.


சம்மாந்துறையை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு விபத்தில் மரணமடைந்துள்ளார்.


இந்த விபத்து நடந்தவுடன் குறித்த பஸ்ஸின் சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் தற்போது பஸ் சாரதி காரைதீவு பொலிஸில் சரணடைந்துள்ளார்.


காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe