Ads Area

சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி கிளினிக் நிலையம் மீள் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிளினிக் நிலையம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு அண்மையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் , இராணுவ கட்டளைத் தளபதி இராணுவ கொமாண்டர்,டொக்டர் மாஹிர்,டொக்டர் றிஸ்வின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அண்மையில் வளத்தாப்பிட்டியில் நடைபெற்ற நடமாடும் வைத்திய முகாம் ஒன்றுக்கு சென்றபோது, சந்திரசேகரன் என்பவரின் உதவியுடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், டொக்டர் திருமதி ஜீவா ஆகியோர் வன்னி எயுட்ஸ் எனப்படும் கனடிய தொண்டு நிறுவனத்தினை தொடர்பு கொண்டு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க லவ் ட்றஸ்ட் நிறுவனத்தின் இணைப்புடன் 1.6 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் இப்புணருத்தாரனம் நடந்தேறியது,


இதன் கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவம் மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe