சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்தமாக வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்வும், கலந்தாலோசனையும் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ரிமால் பகுதி விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (2024-10-11) இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு தலைநகர் ரியாத்தில் பல இடங்களில் பணிபுரியும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சம்மாந்துறை வாழ் நண்பர்களும், குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்வில் ஊரின் சமூகம் சார்ந்த பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, சவுதி அரேபியாவுக்கு தொழில் நிமிர்த்தம் வருகை தரும் இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சவுதி அரேபியாவில் வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த அனைவரும் Sammanthurai Community of Saudi Arabia அமைப்பில் இணைந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.